புத்தரின் இறுதி உபதேசம்.

"அப்ப தீபோ பவ"
"உனக்கு நீயே ஒளியாவாய்"

புத்தர் இறக்கும் போது அவருடைய சீடர்கள் அழுது அரற்றிக் கொண்டிருந்தார்கள். தன் கண்களைத் திறந்து புத்தர் அவர்களிடம் அழுவதை நிறுத்துங்கள்

. நான் இதுவரை சொல்லிக் கொண்டிருந்ததை எல்லாம் நீங்கள் சரியாகக் கவனித்து கேட்க வில்லையா , எதற்கு இந்த அழுகை என்றார் .

தலைமைச் சீடரான ஆனந்தா புத்தரிடம் நீங்கள் எங்களை விட்டு போகப் போகிறீர்கள் . எங்களுக்கு என்ன நடக்கப் போகிறதோ ? என்றார் .

 அதற்கு புத்தர் நான் சொன்னதை நீங்கள் இன்னமும் சரியாக கேட்டு வாங்கிக் கொள்ளவில்லை .

 என் உபதேசங்களை மட்டும் கேட்டுக் கொண்டிராமல் உங்களுக்கு நீங்களே ஒளியாக இருந்திருந்தீர்களேயானால் உங்களுடைய  ஆன்மாவை உணர்ந்து இருந்தீர்களேயானால் அழுவதற்கு எந்த தேவையும் இருக்காது என்றார் ..

மஞ்சுஶ்ரீ என்ற மற்றொரு சீடரைப் பாருங்கள் . அவர் எப்படி அழாமல் உட்கார்ந்து இருக்க முடிகிறது என்று கேளுங்கள்  என்றார் . மஞ்சுஶ்ரீ கூறினார் ..

 என்னுடைய ஒளியைத் தெரிந்து கொள்ள புத்தர் உதவினார் .
நானே சாகப் போவதில்லை என்கின்ற போது புத்தர் எப்படி சாக முடியும் ?

புத்தர் இங்கேதான் இருக்கப் போகிறார் . ஒரு நதி கடலில் கரைந்து விடுவதைப் போல அவர் இந்தப் பிரபஞ்சத்தில் கரைந்து விடப் போகிறார் .

அவர் இந்தப் பிரபஞ்சம் முழுக்க பரவியிருக்கப் போகிறார் . இதுவரை புத்தர் ஒரு சிறு உடலுக்குள் அடங்கிக் கிடந்தார் .

 இப்போது அவருடைய மணம் வெளிப்படப் போகிறது . அவர் எங்கெங்கும் பரவியிருக்க போகிறார் என்பது எனக்கு பெரு மகிழ்ச்சியைத் தருகிறது என்றார் .

புத்தர் இந்த உடலை விட்டு போகப் போகிறார் என்பது எனக்கு எப்படி தெரியும் என்கின்றீர்களா ? என்னுடைய ஆன்மாவை நான் தெரிந்து வைத்திருப்பதால் எனக்கு தெரிந்திருக்கிறது .

அவர் சொன்னதையெல்லாம் நான் கேட்டு வாங்கிக் கொண்டேன் . நீங்கள் எதையும் கவனிக்கக் கூட இல்லை . அதனால்தான் அழுகிறீர்கள் என்றார்.

புத்தர் மீண்டும் பேசினார் . " அப்ப தீபோ பவ "

"உனக்கு நீயே ஒளியாவாய்" .......

இப்படி கூறி விட்டு இந்த பிரபஞ்சத்தில் கலந்து போனார் . அவருடைய முதல் வார்த்தைகளே அவருடைய கடைசி வார்த்தைகளாகவும் ஆகி விட்டது ..

புத்தம் சரணம் கச்சாமி.. 💐

தம்மம் சரணம் கச்சாமி..💐

சங்கம் சரணம் கச்சாமி..💐

Comments

Popular posts from this blog

சித்தர்கள்

வைணவம்