இந்து மதம்


 இந்து மதம் என்ற ஒன்று இல்லை இந்திய அரசு கெஜட் அப்படி தான் சொல்கிறது 14~4~1921 அன்று தான் ஆங்கிலேய அரசு இந்த மதத்தை உருவாக்கி கெஜட்ல் ஏற்றி இருக்கிறது

மேற்கொண்டு தகவல் ஏதேனும் தேவை என்றால் நீங்கள் நெட்டில் தேடி பாருங்கள் 

பகுத்தறிவாளர்கள் இந்து மதத்தை ஏற்று கொள்கிறார்கள்

காஞ்சி பெரியவர் என்று அழைக்கப்படும் சந்திரசேகர் இந்து மதம் என்று ஒரு மதம் கிடையாது அது வெள்ளைக்காரன் உருவாக்கியது என்று தெளிவாக சொல்லி இருக்கிறார்

அவர் சொன்னால் ஏற்று கொள்வீர்கள் தானே


எனது புரிதல் மதம் என்பது மனிதனை நெறிபடுத்த உருவாகியிருக்க வேண்டும்.

ஆனால் இன்று அனைத்தும் அரசியல் மற்றும் வியாபாரமாகி போனது.

நமது தேசத்திலும் பல மதங்கள் இருந்ததாகவும் அவற்றை ஆதிசங்கரர் 6 மதங்களாக சுருக்கினார் என்பதும் வரலாறு.

உலகில் சுமார் 4200 மதங்கள் உள்ளதாம் கூகிள் ஆண்டவர் சொல்கிறார்.

நான் ஒரு மொழியியல் ஆய்வாளரின் பேச்சை கேட்டேன் அவர் கிந்தி மொழி என்பது சுதந்திர போராட்டத்தின் போது உருவான கலப்பு மொழி என்கிறார் தென்னிந்திய மொழிகளில் தமிழில் மட்டுமே 80 சத ஆதி மொழியின் ஆதிக்கம் உள்ளது இருந்தும் உருது சமக்கிருத கலப்பு உள்ளது என்கிறார்.
கீதையில் இந்து, இந்துமதம் என்ற வார்த்தை இல்லை என்றே கிருட்டிண பக்தி இயக்கத்தை சார்ந்தவர்கள் சொல்கிறார் கீதை சொல்வது சனாதன தர்மம் அது பிறப்பின் அடிப்படையில் வருவதல்ல அறிவின் அடிப்படையில் வருவது என்கிறார்.

இவ்வாறு இருக்க மதம் என்ற போர்வையில் நடக்கும் அநீதிகளை நாம் ஆதரித்தால் நம்மை விட கொடியோர் எவர்?


அனைவரும் ஒற்றுமையுடன் வாழ அனைத்து மதவாதிகளும் விட்டுகொடுத்து செயல்பட வேண்டும். 

Comments

Popular posts from this blog

சித்தர்கள்

வைணவம்