Posts

Showing posts from June, 2020

ஆயத்தன் எனும் பக்தன்

Image
முன்னொரு காலத்தில் பொன்னியாற்றின் தென்கரையோரம் ஆநிரைகளை பாதுகாத்து, பராமரிக்கும் அருந்தொழில் செய்து வந்தான் ஆயத்தன். கண்ணன்மீது தீரா பக்தி கொண்டவன். எக்காலமும் எம்பெருமான் கண்ணனை மனதால் நினைத்து எண்ணத்தால் அர்ச்சித்து அந்த அதிர்வலைகளை உடலெல்லாம் நிறைத்து!  உணர்வால் உயர்ந்து வாழ்பவன் ஆயத்தன். ஆநிரைகளும் அவன் அதிர்வலைகளை உணர்ந்து அவன் எண்ணத்திற்கேற்ப நடந்து கொள்ளும். கொடிய விலங்குகள் கூட ஆயத்தன் ஆநிரை மேய்க்கும் எல்லைக்குள் வந்தால் தன் குணம் மறந்து! சாந்தமாய் ஆநிரைகளுடன் பழகி செல்லும். ஆயத்தன் ஒருபோதும் மறந்து கூட கண்ணன் நாமத்தை தன்வாயால் சத்தமாய் உச்சரித்தது இல்லை! இது கண்ணனுக்கே பெருவியப்பாய் இருந்தது. தன்மீது பக்தி கொண்டோர் ஆடலும், பாடலுமாய் ஆனந்தத்தில் குதிப்பார்கள் ஆனால் இவனோ அமைதியே உருவாக அது ஏற்படுத்தும் அதிர்வலைகளை செய்யும் மாற்றத்தை கூட உணராது இருக்கிறானே!  எப்படி என்று சோதித்தறிய புறப்பட்டார் பூலோகம். கண்ணன் புறப்படும் காரணமுணர்ந்த ராதையுமிணைந்து கொள்ள, முதிர்ந்த தம்பதியராய்! பொன்னியாற்றகரையில் ஒருவர்கரமொருவர் பற்றி மெல்ல நடந்தார்கள் ஆயத்தன் ஆநிரை மேய்க்கும் எல்ல

சீவன் முக்தி

Image
ஜீவசமாதி அடைந்த்தார்  மதுரை தொடர் வண்டி நிலையத்தில்  நீண்டகாலம் இருந்தார் ஐயா. மே மாதம் மதியம் 3 மணியளவில் மகாசமாதி அடைந்தார் என்ற செய்தி எம்மை எட்டியது. எமை வாழை வைத்த மகான்கள் வழிகாட்டி செல்கிறார்கள். ஐயா அவர்கள் எனநமக்கு வழிகாட்டியாய் இருப்பார்