பகவான் காலபைரவர்.

OM



நான் ஆசிபெற்ற மகான்களில் அமைதியை மட்டுமே தன் ஆயுதமாக கொண்டு அன்பை பரப்பும் அற்புதமான சித்தர் 



சாக்கடை சித்தர்

மௌனமாகவே வாழ்ந்து சமாதியானவர் எப்போதெல்லாம் பழனி போகிறேனோ அப்போதெல்லாம் ஐயாவிடத்தில் சற்று நேரம் அமைதியாக அமர்ந்து தியானம் செய்து திரும்புவேன் மனம் மிகவும் அமைதியடையும். 
மூட்டைசாமி வேலை கொடுப்பார் சிலருக்கு சிலரை ஏரெடுத்தும் பார்க்க மாட்டார்.  இவர் நல்ல ஆத்மாக்களை கண்ணால் பார்த்து கருணையோடு அன்பை விதைப்பார் ஒவ்வொறு மகானுக்கும் ஒவ்வொறு சிறப்பு. 
கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஐயா சமாதியானார் அதற்கு இரண்டு தினம் முன்பு அவரை பழனியில் ஓர் மருத்துவமனையில் ICU வில் இருக்கும் போது தருசிக்கும் வாய்ப்பு கிடைத்தது கருணை குறயாத அந்த பார்வை இன்னும் என்னுல் ஆழ்ந்து தெரிகிறது.
ஐயாவை பற்றி பல வெளிநாட்டவரும் அறிந்து வைத்துள்ளார்கள் பலரை நான் சந்தித்துள்ளேன். 

மற்றோர் அனுபவங்களை கேட்பதை விட மனமார பிரார்த்தித்து நாம் உணர்ந்து கொண்டு முன்னேற முயல்வதே சிறப்பு என்று நான் எண்ணுகிறேன். 
பேராசை இல்லாது ஐயாவை அனுகுவோருக்கு நிச்சயம் அவர் அருள் கிடைக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. 
விமர்சனம் கொண்டோருக்கு விதி வலியது.


Comments

  1. ஶ்ரீல ஶ்ரீ ரோமரிஷி என்றும். ஶ்ரீ சாக்கடை சித்தர் என்றும் அழைக்க படும் சுவாமிகள் பழனி அடிவாரத்தில் பல ஆண்டுகளாக உள்ளார்கள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சித்தர்கள்

வைணவம்