வைணவம்
மத அடையாளங்களில் அதிக நாட்டமில்லை. திருமண் என்றும் திருநாமம் என்றும் சொல்லப்படும் மேல் நோக்கிய முக்கோடுகள்! வைணவத்தின் மிக முக்கிய அடையாளமாக கருதப்படுவது! பெருமாளின் பாதம் என்றும், வைணவ சூலம் என்றும் சொல்லப்படுகிறது. சங்கு சக்கரம் வெற்றியின் அடையாளமென்று சொல்கிறார்கள். நான் சிறுவனாய் இருந்த காலம் எங்கள் குடும்பத்தில் ஒவ்வொரு வழிபாட்டிலும். பொங்கல், தீபாவளி, புரட்டாசி விரதம் மற்ற விசேட நாட்களில் எங்கள் தந்தையார் எங்களுகெல்லாம் நாமம் போட்டு விடுவார். (தென்கலை மரபு கொண்டவர்கள்) நான் கொஞ்சம் வளர்ந்ததும் அந்த பொறுப்பு எனக்கு வந்தது நான் அணிந்துகொண்டு, தம்பிகளுக்கும் திருநாமம் போட்டு விடுவேன். நாங்க வளரவளர பலரும் கேலி செய்வதால் அதை கொஞ்சம் கொஞ்சமாக தவிர்த்து விட்டோம். ஆறாம் வகுப்பு படிக்கும் போது எனது ஆசிரியர் திரு வரதராசன் அவர்கள் எங்க குடும்ப வழக்கம் தெரிந்து கொண்டு ஏண்டா நாமம் போடுவது இல்லை என்று கேட்டு ஏதோ விளக்கம் சொன்னார் எனக்கு புரியல! ஒருநாள் நானாக நெற்றியில் பெரிய நாமமாக போட்டு பள்ளி சென்று எல்லோருடைய கேலிக்கும் ஆளானேன் பின்னர் ஆசிரியர் சொன்ன அறிவுரைபடி சிகப்பு கோடு ஒன்னு
Comments
Post a Comment